141 எம்.பிக்கள் இடைநீக்கம்..! மத்திய அரசை கண்டித்து விசிக போராட்டம்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (09:43 IST)
141 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


 
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில்,  50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ந்த நிர்வாகிகள்,                   பாராளுமன்றத்தில் 141 உறுப்பினர்களை சர்வாதிகார ஆட்சி நடத்தும்  மோடி அரசு,  இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கண்டித்தும்,  சர்வாதிகார போக்கை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.

உடனடியாக மோடி அரசு இடைநீக்கம் செய்த 141 உறுப்பினர்களை திரும்பப் பெறக் கூறி கண்டன முழக்கங்கள் முழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்