தமிழகம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டு 14 பேர் பலி

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (11:06 IST)
தமிழகம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டி கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.   
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் மேலும் மழையும் மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது, கடந்த காலத்தில் மழைக்காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட தற்போது மிகவும் குறைவு.
 
மேலும் கடந்த காலத்தில் மழை வெள்ளத்தால் 31,451 குடிசைகள் சேதம் அடைந்திருந்தன. தற்போது முதலமைச்சர் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்று பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்