வெளியானது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!!

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (10:26 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவுள்ளது. இந்த முறை 94.4 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்த்தி விகிதம் அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வில் 92.5 சதவீதம் மாணவர்களும், 96.2 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்பொழுதும் போல இந்த ஆண்டும் மாணவிகளில் தேர்ச்சி விதிகமே அதிமாக உள்ளது.
 
சுமார் 1,22,757 மாணவ, மாணவிகள் 450-க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. 
 
100/100 மதிப்பெண் பட்டியல்:
 
தமிழ்: 69
ஆங்கிலம்: 0
கணிதம்: 13,759
அறிவியல்: 17,481
சமூக அறிவியல்: 61,115
 
மேலும், இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்