உத்தரகாண்ட் நிலச்சரிவு.. ஹெலிகாப்டர் மூலம் 10 தமிழர்கள் மீட்பு.. மீதியுள்ளவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:17 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களில் 10 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 30 தமிழர்கள் நிலச்சரிவு காரணமாக சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டிருந்தது.

சிதம்பரத்தை சேர்ந்த அந்த 30 பேரும் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தின் அருகே இருந்த நிலையில் அவர்களுடைய வேனில் எரிபொருளும் தீர்ந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உத்தரகாண்ட் அரசு அதிரடியாக 30 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹெலிகாப்டர் மூலம் தற்போது 10 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட 10 தமிழர்களும் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 பேர்கள் இன்று மாலைக்குள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என  உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்