மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தன் மீது சுமத்துப்பட்டுள்ள புகாரை திசை திருப்பவே மணமகன் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் வரவே, இரு தரப்பினரும் ஆதாரத்தை சமர்பிக்காமல் எதையும் உறுதி செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாப்பிள்ளை வரதட்சணை கேட்பதாக அக்டோபர் ஐந்தாம் தேதியே பெண் வீட்டார் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரை திசை திருப்ப மணமகள் திடீரென நான் கேட்காமலே வரதட்சணை கொடுக்க வந்தார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் ஆதாரம் இன்றி கூறிக் கொண்டிருப்பதால் தகுந்த ஆதாரத்துடன் வரவேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியதால் அடுத்த விசாரணையின் போது இரு தரப்பும் ஆதாரத்தை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.