மே மாசத்தில் உச்சமாம்... தமிழகத்தில் கொரோனா அபாயம் எப்படி இருக்கும்??

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (16:42 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பின்வருமாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 649 ஆக உள்ளது.  
 
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையிலும் மக்கள் வெளியே நடமாடி கொண்டிருப்பதால் நிலைமை சிக்கலுக்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் 13 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். 
 
மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இம்மாதிரி கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பின்வருமாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 60,000 பேர் வரை நோய் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் 1 லட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக்கூடும். மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் 75% நோய் தொற்று குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்