எச்சரித்த போலீசை நக்கிய இளம்பெண்... கடுப்பான அஜித் பட வில்லன் - வைரலாகும் வீடியோ!

வியாழன், 26 மார்ச் 2020 (16:09 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், ஒரு சில பொது மக்கள் அதனை சரியாக பின்பற்றாமல். வைரஸின் தாக்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாகனங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கொல்கத்தா போலீசாரின் சோதனை சாவடி  இடத்தில் பெண் ஒருவர் காரை நிறுத்தி இருக்கிறார். அவரிடம் போலீசார் வெளியில் வர கூடாது என கொரோனா விழிப்புணர்வு குறித்து கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் போலீஸ் மீது எச்சில் துப்பி அவரை அவதூறாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அஜித்தின் விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய்  திமிர்பிடித்த பெண்ணின் வெட்கப்பட வைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

An arrogant lady misbehaved & spat on Kolkata Police personal's uniform after he tried to stop the car during checking point.
Police is just doing their duty to ensure a proper lockdown so that the #COVID2019 doesn't spread among masses pic.twitter.com/6RSSsRfyDM

— Rishi Bagree

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்