முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கல்ந்து அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு பின்பு அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
குறிப்பு: சீரக சம்பா அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.