சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டி அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, சப்பத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்புவிட்டு வேகவிடுங்கள், இது வேக 5 நிமிடங்கள் ஆகும். வெந்த பிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.