உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் என்ன...?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:53 IST)
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால்,இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.


அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் எடையைக் குறைக்க நினைபவர்கள் இதனை தினமும் உட்கொள்வது நல்லது.

தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைத்துள்ளதால் ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகளை வலிமையாக்கும். ஏனெனில் ஒரு உலர்ந்த அத்திப்பழம் நமக்கு அன்றாடம் தேவைப்படும் கால்சியம் சத்தில் 3 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

தினமும் உலர் அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு அந்த பாலை பருகி வந்தால் உடல் பலம் பெரும், நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.

தினமும் உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமத்தை அழகாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இளமையான சருமத்தை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்