அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதனுடைய இலை, வேர்கள் மற்றும் கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இது வடமொழியில் அஸ்வகந்தா என்றும், தமிழில் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
அமுக்குரா கிழங்கு இலைகளை பூசும் போது இது உடலில் தோன்றும் கட்டிகளை அமுக்கும் வல்லமை கொண்டது. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளையும் உடைய 5 அடி வரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை இந்த அஸ்வகந்தா. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது, கிழங்கு மருந்துவப் பயனுடையது.
நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாகியாகவும், இச்சை பெருக்கியாகயாகவும் செயல்படும்.