சர்க்கரைவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (09:43 IST)
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.
 
சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கி, உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்