வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும் !!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (09:25 IST)
தேள் கொட்டியவுடன் சாம்பார் வெங்காயத்தில் ஐந்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் வெட்டப்பட்ட பாகத்தை தேள் கொட்டிய இடத்தில் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். இந்த விதமாக ஐந்து வெங்காயத்தையும் தேய்த்து முடித்தால் தேள் விஷம் நீங்கிவிடும்.

10 கிராம் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, 5 கிராம் எடை சீரகம், இரண்டு கைப்பிடியளவு இலந்தயிலை இவைகளையும் நைத்துப் போட்டு இரண்டு ஆழாக்களவிற்கு தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உஷ்ண வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
 
ஒரு அவுன்ஸ் வெங்காயச் சாற்றுடன் அரை அவுன்ஸ் அளவு பசுவின் நெய் சேர்த்துக் கலக்கிக் கொடுத்து வந்தால் இரத்த பேதி நின்றுவிடும்.
 
வெங்காயத்தின் காய்ந்த தோலை எடுத்து அதைச் சட்டியில் போட்டு கருக வறுத்து, எடுத்துத் தூள் செய்து 21 கிராம் எடைத் தூளுடன், தேக்கரண்டியளவு தேன் சேர்த்துக் கலக்கி உட்கொண்டால் இரத்த வாந்தி நிற்கும்.
 
வெங்காயம், தரைபசலைக் கீரை, சீரகம் இவைகளைச் சமஅளவாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, காலை, மாலையில் கொட்டைப் பாக்களவு வீதம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகிவிடும்.
 
வெங்காயம், நல்ல வேளயிலை, தும்பையிலை இவைகளை ஒரேயளவாக எடுத்து மைபோல அரைத்து குஷ்டம், கிரந்தி, மேகப்புண்களின் மேல் கனமாகத் தடவி வந்தால் புண்கள் ஆறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்