தேனை தினமும் சாப்பிடுவதால் என்ன பலன்கள் !!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (17:20 IST)
தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபரக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.


வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும். இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்றபிரச்சனைகள் சரியாகும்.

தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.  தினமும் காலையில் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவேண்டும். இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

உடல் பருமனாக இருப்பவர்கள், தேனுடன் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து விடலாம். காலை உணவிற்குப் பின் தினமும், மாதுளம் பழச்சாறுடன், தே கலந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். தூக்கம் வரவில்லை என்றால் ஒரு டீஸ்பூன் தேன் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்