தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் இத்தனை பயன்களா...!!

Webdunia
வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினெரல்ஸ் அதிகம் உள்ளது.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும்.

வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
 
வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து மிக மிக முக்கியம். அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய உதவியாக இருப்பது புரதச்சத்து ஆகும். குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
 
வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது. உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிக்கல் செல் அழிவினை ஏற்படாமல் காக்க ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
 
வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்களின் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் இ மிக மிக முக்கியமான ஒன்று.மேலும் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் இ உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கின்றது.
 
வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.
 
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்