கொய்யா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்...!!

Webdunia
குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா. நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

கொய்யாப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். 
 
கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்றவற்றை குணப்படுத்தும்.
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின்  ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
 
வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்