ஊறவைத்த வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

Webdunia
வெந்தய விதைகள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இப்படி பல நன்மைகள் நிறைந்த வெந்தயத்தை நீரில் ஊறவைத்து உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 
வெந்தய விதைகள் மாதவிடாய் வலிக்கு ஓரு நல்ல தீர்வாகும். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்க ஊற வைத்த வெந்தய  விதைகளை சாப்பிட்டால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
 
கபம் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயத்தை ஊறவைத்தோ அல்லது முழு தானியமாகவோ பயன்படுத்தலாம். பித்த பிரச்சனை உடையவர்கள் வெந்தய விதைகளை  நீரில் ஊறவைத்து தண்ணீர் குடிக்கலாம். இதுவயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை போக்க உதவும்.
 
நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினை உள்ளவர்கள் இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
 
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் மற்றும் அதன் தண்ணீரை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் பருப்பு மற்றும் கறிகளில் சேர்த்து சாப்பிடலாம். இதனை 21 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்