அடிக்கடி உணவில் அரைக்கீரை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது.
 


அரைக்கீரையில் உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும். இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர  தலைமுடி நன்கு வளரும். 
 
தலைச்சூடு குறையும். இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.
 
இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். 
 
அரைக் கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும். இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி  தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும். 
 
அரை கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. ஏற்கனவே புற்று நோய் பாதிப்புகள்  உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.
 
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி  போன்றவற்றைக் குணப் படுத்தும்.
 
இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக் கீரை குணப்படுத்தும். உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்