வாயு தொல்லையை குறைக்க உதவும் சூப்பர் டிப்ஸ் !!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (18:10 IST)
மலசிக்கல் பிரச்சனை இருந்தால் வாயு பிரச்சனைக்கு வழி வகுக்கும். குடலில் புழுக்கள் இருந்தாலும் வாயு தொல்லைக்கு காரணமாக அமையும்.


இரவு உணவை சாப்பிட்ட உடன் தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். இது சமிபாட்டு பிரச்சனையை உருவாக்கும். உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிடுவது சிறந்தது.

உடலில் தண்ணீரின் அளவு குறையும் பொழுது பல பிரச்சனைகள் வருகின்றன. அதில் ஒன்று தான் வாயு தொல்லை. தினமும் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

வாயு பிரச்சனையை தரும் உணவுகளை அன்றாட உணவுகளில் குறைத்துக் கொள்வது சிறந்தது. முக்கியமாக அதிக காபோவைதரேட் உள்ள உணவுகள் வாயு தொல்லைக்கு காரணமாக அமைகின்றது.

உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. தினமும் உடல் பயிற்சி செய்வது வாயு தொல்லையை குறைக்க உதவும்.

தினமும் சரியான நேரத்திற்கு மூன்று வேளை உணவையும் சாப்பிடுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளும் போது சமிபாட்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உணவுக் கழிவுகளை வெளியேற்றும் எண்ணம் வந்தால் உடனே வெளியேற்றி விடுங்கள். அல்லது வாயு தொல்லை அதிகரிக்கும்.

இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்