ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சனி, 2 ஜூலை 2022 (14:38 IST)
ஞாபக சக்தி குறைவதற்கு சரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணம் ஆகும். மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்தால் மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறையும். எனவே தினமும் போதியளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.


மூளைக்கு ஒமேகா-3 சத்து மிக அவசியம். ஒமேகா-3 மூளையில் புதிய நரம்புகள் உருவாவதற்கும் மூளை சரியாக செயல்படுவதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் மிக உதவியாக இருக்கின்றது.

முட்டையில் மூளையின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பல இதர ஊட்ட சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன. மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் தவறாமல் தினமும் உணவில் முட்டை சேர்த்து சாப்பிடவேண்டும்.

சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் பிரதானமானது பால். பாலில் புரதம் மற்றும் விட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. மூளை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டுமெனில் தினமும் ஒரு கோப்பை பால் குடித்து வருவது மிகவும் நல்லது.

தினமும் உணவில் வல்லாரை சேர்ப்பது சிறந்தது வல்லாரை மூளைக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்க கூடியது. பொதுவாக கீரை மற்றும் மரக்கறி வகைளில் உள்ள ஊட்ட சத்துக்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

இரவில் பாதாமை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் மூளையின் நரம்புகள் வலுப்பெறுவதுடன் நினைவாற்றலும் அதிகரிக்கும்.
தேன்

தேனில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி தேன் சாப்பிட்டு வந்தால் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்