அதிக உடல் சோர்வு. எந்த வேலையும் செய்வதற்கு மனமின்மை. எப்போதும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முறையற்ற மாதவிடாய் பிரச்சனை.
வழக்கத்துக்கு மாறான அதிக முடி உதிர்வு பிரச்சனை. மலச்சிக்கல் மற்றும் மலம் கட்டியாக இறுக்கி வெளியாகுதல். வறண்ட சருமம் மற்றும் அதிக குளிர் உணர்வு. அதிக ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.
பயம், பதட்டம், கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் மற்றும் அதிக கோப உணர்வு. குறிப்பிட்ட தினத்தில் மாதவிடாய் வராமல் நாட்கள் தள்ளிப்போதல் அல்லது முந்துதல் போன்ற மாதவிடாய் கோளாறுகள். அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழித்தல். சரியான தூக்கம் வராமை, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருத்தல் போன்றவையாகும்.