கரும்புச் சாற்றினை அருந்தி வரும்பொழுது உடலில் ஏற்படும் டி என் ஏ சேதத்தை தடுத்து உடல் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றினை அடிக்கடி அருந்துவது நல்லது.
சிறுநீர் பாதை தொற்று மற்றும் எரிச்சலை சரி செய்யக் கூடியது. உடல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி கரும்புச் சாறு அருந்துவது சிறந்தது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்தும், மருத்துவ பண்புகளும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து அளித்து உடல் வறட்சியை தடுக்கிறது.
கரும்பில் மஞ்சள் காமாலையை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளதால், கரும்பு சாற்றில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தி வந்தால், கல்லீரல் மற்றும் பித்தப்பையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பை குறைக்கிறது.
கரும்பு செரிமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது. கரும்பு சாப்பிடுவதன் மூலமாக நாம் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவுகின்றது. பசியைத் தூண்டி, வயிறு மற்றும் குடல் போன்ற செரிமான உறுப்புகளை பலப்படுத்துகிறது.
கரும்பில் செங் கரும்பு மற்றும் வெண் கரும்பு என்ற இரு வகைகள் உள்ளன. வெண் கரும்பில் உள்ள பண்புகள் இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக கலக்கும் தன்மை கொண்டுள்ளதால், சர்க்கரை சத்து உள்ளவர்கள் இதனை அளவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.
கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது, பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகள் அழிந்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு கரும்பும் அதன் சாறும் சிறந்த உணவாக பயன்படுகிறது. உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி, சமநிலைப்படுத்துகிறது.