சுவாச சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பெருஞ்சீரகம் !!

பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு, அதை நன்கு கசக்கி, சற்று இதமான சூட்டில் அந்த நீரை வயிறு கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குளிர் காலங்களில் சிலருக்கு, ஜலதோஷம் பிடித்துக் கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும்போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்வார்கள். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று சிறிது வெந்நீரை அருந்தினால், மேற்கொண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.
 
மாமிச உணவுகள் சாப்பிட்ட போதும் வேறு பல உடல் நல குறைபாடுகளாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்த பின்பு, சிறிது பெரும் ஜீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக, பெருஞ்சீரகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீர் கோர்ப்பு அல்லது நீர் கோர்த்துக் கொள்ளுதல் என்பது சிலரின் உடலில் இருக்கும் திசுக்களின் நீர் அதிகம் சேர்ந்தோ மிகுந்த துன்பத்தை கொடுக்கும். பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், இந்த நீர் கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது பெரும் சீரகத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் சேர்ந்திருக்கும் அதிக அளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டது.
 
உடலை, பலவித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை, நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகின்றது. தினசரி ஒருமுறையேனும் சிறிதளவு பெருஞ்சீரகத்தினை நன்கு மென்று சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெரும். அதில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் முழுமையாக நீங்கி, கல்லீரல் மற்றும் கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்