சிலவகை மூலிகைகளும் அதன் அற்புத பயன்களும் !!

Webdunia
அம்மான் பச்சரிசி: இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும். 


பாலைத்தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு,  மறையும். கால் ஆணியின் வலி குறையும். பூ 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.
 
ஆனை நெருஞ்சில்: இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும். இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து  நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.
 
இலந்தை: இலை - 1 பிடி, மிளகு - 6, பூண்டு - 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.  பச்சை இலையை அரைத்து சிறுஎலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.
 
இலுப்பை: இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும். 10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.
 
கல்யாண முருங்கை: இலைச்சாறு 30 மி.லி. 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன், பின் காணும் வயிற்றுவலி தீரும். இலைச்சாறு 10 துளி, 10 துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்