குழந்தைகளுக்கு பிஸ்தா பருப்பினை தினசரி என்ற அளவில் கொடுத்து வந்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பானதாகவும், ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும் இருக்கும். மேலும் குழந்தைகள் மிகவும் அறிவுக் கூர்மையுடன் செயல்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.
பிஸ்தா இதயநோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதால் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது, மேலும் இது நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.