நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் சப்ஜா விதைகள் !!

Webdunia
சனி, 7 மே 2022 (15:04 IST)
சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3,  பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.


சப்ஜா விதையினை இரவில் படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் சூட்டை போக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் கண் எரிச்சலை குணப்படுத்தும்.

உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதுடன் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும். சப்ஜா விதையில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுபவர்கள் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் தொப்பையும் குறையும். இந்த சப்ஜா விதையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதற்கு காரணம் சப்ஜா விதையில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த சப்ஜா விதையினை சாப்பிட்டு வரலாம்.

சப்ஜா விதை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தினமும் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

சப்ஜா விதையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். மேலும் சப்ஜா விதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி சப்ஜா விதைக்கு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்