வாழைப்பூவை சாப்பிட்டு வருவதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

சனி, 7 மே 2022 (12:09 IST)
வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள் ஆகியவை குணமாக வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.

வாழைப்பூவில் வைட்டமின் A,C,E போன்ற பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. எனவே இது ஒரு சிறந்த சுகாதார உணவாகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் மூலமாகவும் விளங்கும்.

வாழைப்பூவில் மெக்னீசியம் இருப்பதால், வாழை மலர்கள் பதட்டத்தை குறைத்து நல்ல மனநிலையை அதிகரிக்கும். அவை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கையான மன அழுத்தங்களை எதிர்க்கும் சக்தி படைத்தவை.

வாழைப்பூவை வேகவைத்து பொரியல் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் எ நிறைந்துள்ளது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்