புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் !!

சனி, 7 மே 2022 (11:49 IST)
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புடலங்காயை பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


உடல் உஷ்ணம் மற்றும் நாள்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிற்று போக்கு ஏற்படுகிறது.இவர்கள் புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

புடலங்காய் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். எனவே புடலங்காயை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

புடலங்காய் சாறினை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.

தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்