பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை...!!

Webdunia
அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இதன்  இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும்.
 
சுத்தம் செய்யப்பட்ட அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.
 
இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில்  ஆறும். 
 
தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.
 
அகத்திக் கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும். 
 
பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும்.
 
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மைகொண்டது. ஆகவே, சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி  சாப்பிடக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்