கிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அற்புத பலன்களும் !!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (12:44 IST)
கிவி பழத்தில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள், கரோடனாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது.


தினமும் இரண்டு முதல் மூன்று கிவி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இதில் அதிக அளவில் உள்ள லுடீன் எனும் பொருள் கண்பார்வைக்கு பெரிதும் உதவி செய்கிறது, விட்டமின் ஏ கண்பார்வை சிறக்க உதவி செய்கிறது.

கிவி பழத்தில் ஆஸ்துமாவை சரிசெய்யும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கிவி பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன் உடலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் செய்கிறது.

கிவி பழத்திலுள்ள நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் இதய நோய்கள் வராமல் காக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கிவி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த உறைவு 18 சதவிகிதம் குறைவதாக கூறப்படுகிறது.

கிவியில் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வயதாகும் தன்மை குறைந்து சுருக்கங்கள் இன்றி உடல் இளமையை தக்க வைக்கலாம்.

கிவியில் உள்ள விட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது.சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் உடலினுள் வரவிடாமல் தடுக்கிறது. கிவி பழம் ஜீரண நேரத்தில் மிக குறைவான அளவே சர்க்கரையை உடலுக்குள் ஏற்றுகிறது, ஆகவே நீரிழிவு நோயாளிகள் கிவி பழத்தை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்