குருமார்களை நினைத்து வழிபட உகந்த ஆடி பெளர்ணமி விரதம் !!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:57 IST)
தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஞானநூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன.


கோ பத்ம விரதம், நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினம் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தை குரு பூர்ணிமா என்றவாறு மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை, ஆசான்களை போற்றி வழிபடும் தினமாக, குரு பூஜை செய்யப்படும். வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் இத்தினத்தை கொண்டாடுகின்றனர்.

வேதம் பயின்ற வேதாந்திகள் கூட தங்கள் குருமார்களை நினைத்து வழிபட வேண்டிய நாள். குரு மகான்களான தட்சிணா மூர்த்தி, வியாசர், ஆதிசங்கரர், இராமனுஜர் போன்ற குரு மகான்களையும் வழிபடவேண்டிய நாள்.

கல்வி கடவுளான ஹயக்ரீவர் அவதரித்த நாள் ஆடி பெளர்ணமி தான். எனவே கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கும் வகையில் அன்றைய தினம் விரதமிருந்து ஹயக்ரீவரை மாணவர்கள் வணங்குதல் வேண்டும். ஹயக்ரீவர் ஜெயந்தியாக பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்