எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்ட லெமன் க்ராஸ்...!!

Webdunia
எல்லா வகையான மண் வகைகளிலும் நன்கு செழித்து வளர கூடியது லெமன் இராஸ். இதனை தமிழில் “வாசனைப் புல்” என்றும் அழைக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளது.
இவை கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கலந்ததுபோல் இருப்பதால் இதனை “எலுமிச்சைப் புல்” அல்லது “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
 
உடல் எடையை குறைக்க மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீ தொடர்ந்து குடித்து வாருவது நல்ல பலன் தரும்.
 
இந்த லெமன் க்ராஸ் என்ற புல் பல்வேறு பொருட்கள் தயாரிக்க இது மூலப்பொருளாக பயன் படுகிறது. அவற்றில் லெமன் க்ராஸ் டீ லெமன் க்ராஸ் பவுடர், லெமன் க்ராஸ் ஆயில், லெமன் க்ராஸ் சோப்பு, லெமன் க்ராஸ் ரூம் பிரெஸ்னர்.
 
லெமன் க்ராஸ் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 
லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே போதும். இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு  முற்றுப்புள்ளி  வைக்கும்.
 
இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. சரும பிரச்சனைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது. கிருமி நாசினியாகவும்,  மணமுட்டியாகவும்  பயன்படுகிறது. தீபங்களில் இந்த ஆயிலை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.
 
இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ்  டீ பேருதவியாக இருக்கிறது.
 
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதுடன் இந்த  மாதவிடாய் வலியை குறைகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்