பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை  வலிமையாக்கலாம்.
வாழைப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி முடியின்  வலிமையை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த  நீரில் நன்கு அலச, முடியின் வலிமை அதிகரித்து உதிர்வது குறையும்.
 
தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1 மணிநேரம்  ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனையை  முற்றுலும் தடுக்கலாம்.
 
நெல்லிக்காயின் சாறு மற்றும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி இரண்டையும் கலந்து அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1  மணிநேரம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும்  பிரச்சனையை முற்றிலும் தடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்