முதலில் தூதுவளைக் கீரையை அதிலுள்ள முட்களை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும். பிறகு அதே கடாயில் உளுந்தையும் வத்தல் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.
தூதுவளை கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். பின்பு பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை துவையல் தயார்.
குறிப்பு: இந்த துவையலுடன், 2 பல் பூண்டு, தேவைப்பட்டால் இஞ்சி ஒரு துண்டு, சிறிதளவு மிளகு சீரகம் சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.