செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதோடு காயத்தூள், மிளகாய் வத்தல், சீரகம், சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும். பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மற்றும் பீன்ஸை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.