மருத்துவகுணம் நிறைந்த தான்றிக்காயை எதனுடன் சாப்பிடவேண்டும்...?

Webdunia
தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்பும் கொண்ட சுவை கொண்டது. செரிமானத்தின் போது இனிப்பு சுவை கொண்டதாக மாறும். உஷ்ண குணம் கொண்டது. தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும். 

தான்றிக் காயின் சதைப் பகுதியானது மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். தான்றிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மற்றும் வறட்டு இருமல், மற்றும் அம்மை நோய் குணமாகும்.
 
கப பித்தங்களை தணிக்கும், மலத்தை வெளியேற்றும், கண்களுக்கு இதம் அளிக்கும், மற்றும் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் விதைகளில் உள்ள பருப்பு மயக்கத்தை உண்டாக்கும். இதன் காயில் 17% டேனின் உள்ளது. இதில் 25 % மஞ்சள் நிறமுள்ள எண்ணெய், மேலும் மாவுப் பொருள், சைபோனின் போன்றவை உள்ளன.
 
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்றவை சேர்ந்தது தான் திரிபலா சூரணமாகும். தான்றிக்காய் திரிபலா சூரணத்தில் ஒன்றாகும். திரிபலா சூரண கலவையை தொடர்ந்து 48 நாட்ள் எடுத்துக்கொண்டால் உடல் இரும்பு போல உறுதியாகி நோயில்லா நீண்ட வாழ்வை அளிக்கும்.
 
தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு விரைவில் குணமாகும். மேலும் பல்வலி, சிலந்தி கடியால் ஏற்பட்ட நஞ்சு, இரைப்பு பிரச்சனைகள் நீங்கி உடல் வலிமை பெற உதவுகிறது.
 
தான்றிக்காய், நிலப்பனைகிழங்கு, பூனைக்காலி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து, அதில் ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மாலை என  இருவேளையும் பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்பு போல உடல் உறுதியடையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்