சுருக்கங்கள் அற்ற கண்களை பெற எளிதான அழகு குறிப்புக்கள் !!

தயிர் ஒரு தேக்கரண்டி அதனுடன் தேன் சம அளவு மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து அந்தக் கலவையை கண்களுக்கு கீழ் பயன்படுத்துங்கள். பின் 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுங்கள்.

2 டேபிள் ஸ்பூன் அலோவேரா ஜெல், 1 டேபிள் ஸ்பூன் யோகர்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிகாயின் சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை, கண்களுக்கு கீழே தடவவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து அதனை டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்து விடுங்கள்.
 
ஒரு துண்டு பப்பாளி மற்றும் சிறிதளவு தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு பிளெண்டரில் கிரீமியாக வரும் வரை கலக்கிக் கொள்ளவும். கிரீமியாக உள்ள பேஸ்டை உங்களின் கண்களுகுக் கீழே பயன்படுத்துங்கள். பின் 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
 
ஒரு கிண்ணத்த்தில் 1 டீஸ்பூன் வாழைப்பழம் மற்றும் அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக பிசைந்து விட்டு, அந்தக் கலவையை உங்கள் கண்ணின் கீழ் பகுதியில் தடவுங்கள். பின் சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விடுங்கள். சிறந்த முடிவுகளைப் பெற தொடர்ந்து தினமும் இதனை செய்யுங்கள்.
 
ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி மோர் சேர்த்து கலக்குங்கள். பிறகு கண்களுக்குக் கீழ் மற்றும் முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் கவனமாக தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பின்னர் ஈரமான காட்டன் துணியால் அதனை துடைத்து எடுத்து விடுங்கள் போதும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்