தலைமுடியை பராமரிக்க வீட்டிலேயே சுலபமாக ஹேர்பேக் செய்வது எப்படி...?

Webdunia
தலைமுடி பராமரிப்பு: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடிகொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.
 
மிக்ஸியில் ஒரு வாழைப்பழத்தை போட்டு அதனுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.  முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக அந்த ஹேர் பேக்கை கையிலேயே எடுத்து தலையில் தடவிக்கொள்ளலாம். 30 நிமிடங்கள் கழித்து அலசி விடலாம். வாரம் ஒருமுறை தொடர்ந்து இதை செய்துவருவதன் மூலம் முடி உதிர்வு குறைவதோடு, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
 
ஆரஞ்சு பழத்தோல்: ஆரஞ்சு பழத்தோல்களை, மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரம் ஒருமுறை தடவிக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
 
வேப்பிலை: வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறையும். வேப்பிலைப் பசையுடன் சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
 
வெங்காய சாறு: சின்ன வெங்காய சாறு எடுத்து கலந்து தலைக்கு பூசி கொஞ்ச நேரம் வைத்திருந்து குளிப்பது அருமையான நல்ல ரிசல்ட் கிடைக்கும். கொஞ்ச  நேரம் வெங்காய வாசனை தலையில் இருக்கும். பிறகு சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்