வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும்.
நன்னாரி வேரை இடித்து சூரணம் செய்து அதற்கு சம எடை சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 35 கிராம் - 50 கிராம் வீதம் 2 வேளை 7 நாட்கள் கொடுக்க செரியாமை, அக்கினிமந்தம், வெள்ளை, கீல் பிடிப்பு, பிரமேகம் தீரும்.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில் வெல்லம், எலுமிச்சை சாறுகலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.