எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்க உதவும் பச்சை பட்டாணி !!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:33 IST)
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.


பச்சை பட்டாணியில் குறைந்த கலோரிகள் என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

பச்சை பட்டாணி இனிப்பும் மாவுச்சத்தும் கொண்டது. இது பீன்ஸ் வகையை சேர்ந்தது. உடலுக்குத் தேவையான வைட்டமின் கே, வைட்டமின் சி, புரதச்சத்து ஆகியவை இதில் உள்ளது.

மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணி ஜீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.

பச்சைப்பட்டாணியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளமேட்டரி ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலியை தவிர்க்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே ஆனது எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதும் தடுக்கப்படுகிறது.

பச்சைப்பட்டாணியில் உள்ள ப்ளேவனாய்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் உடலை இளமையாக வைத்திருக்க செய்கிறது. கொலாஜன் நிறைவாக இருந்தால் சருமம் உறுதியாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்