ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முருங்கை கீரை பொடி !!

Webdunia
முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது விட்டமின் A, B சத்து, இரும்பு சத்து, மினரல், அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் நிறைந்துள்ளது.

முருங்கை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், உடலில் ஏற்படும் வீக்கங்களை குனப்படுத்தும் தன்மை உடையது. மேலும் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கும்.
 
தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிடுவதால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
 
சர்க்கரை நோய் உல்லவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உல்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுகாக்கும்.
 
முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர்  இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
 
சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து  காப்பாற்றும்.
 
முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்