கொத்தவரங்காயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்ட கொத்தவரங்காய், உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது. மூட்டு வலியை சரி செய்கிறது.

அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
 
இதய நோய் வராமல் தடுக்கும் கொத்தவரங்காய், ஆஸ்துமாவிற்கு நல்ல மருந்து. சிறந்த கிருமி நாசினி மட்டுமல்ல, நல்ல வலி நிவாரணி, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.அதுமட்டுமல்ல, கொத்தவரங்காயை கர்ப்பிணி பெண் வாரத்தில் இரு முறை சாப்பிட்டு வந்தால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.  
 
குழந்தைகளின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு கொத்தவரங்காய் நல்லது. உடல் எடையை குறைக்க தேவையான வேதியல் பண்புகள் கொத்தவரங்காயில் இருக்கிறது என்பது இதன் சிறப்பம்சம். 
 
ஒவ்வாமையை போக்கவல்ல கொத்தவரங்காய், மன அழுத்தத்தை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது. சரும பிரச்சினையை தீர்க்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது, ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. அவ்வப்போது கொத்தவரங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். ஐன்னி கண்டவர்களுக்கு கொடுக்க உகந்த காய், கொத்தவரங்காய். 
 
கொத்தவரங்காயில் விட்டமின்ன் கே, போலிக் ஆசிட்,  நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை நார்ச்சத்துக்களும் இருக்கிறது. இரும்பு சத்து, கால்சியம், சுண்ணாம்புச்சத்து மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும்  கிளைக்கோநியூட்டிரியன்ட் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்