உருளைக்கிழங்கை எந்த வகையில் எடுத்துக்கொள்ளவேண்டும் தெரியுமா...?

Webdunia
புதன், 11 மே 2022 (10:05 IST)
உருளைக்கிழங்கின் தோலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது செரிமான இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.


இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.

இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம் உதவுகிறது. உருளைக்கிழங்கில் வளமான அளவில் பொட்டாசியம் இருப்பதால், உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர உதவுகிறது.

மன அழுத்தம், செரிமான கோளாறுகள், உடல் பருமன், நீரிழிவு நோய், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவது போன்றவை இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன. உருளைக்கிழங்கில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நார்ச்சத்து உதவுகிறது. பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து முகத்தில் தடவினால் சருமத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குவதோடு, முகப்பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவத்தை தடுத்து, இளமைத் தோற்றத்தை பராமரிக்கிறது.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளதால், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியம் ஒரு எலக்ட்ரோலைட் ஆகும். இது உடலின் திரவங்களை சீராக்கவும், தசையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.

உருளைக்கிழங்கை சமைப்பதை பொறுத்து ஊட்டச்சத்துகள் மாறுபடும். உருளைக்கிழங்கை வறுப்பது அவற்றை வேகவைப்பதை விட அதிக கலோரிகளையும் கொழுப்பையும் அதிகக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்