அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் !!

செவ்வாய், 10 மே 2022 (19:25 IST)
அன்னாசிப்பழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.


உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது. அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.

அன்னாசிப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசிப்பழத்தில் தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு  துண்டுகளாக செய்து வெய்யிலில் வற்றல்களாக செய்து, அவற்றை இரவில் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊறவைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வாதம், பித்தம் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்