சர்க்கரை நோயா? தினமும் முருங்கை டீ பயன்படுத்தி பாருங்க....!

Webdunia
முருங்கையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் உண்டாகின்ற ஏராளமான நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. குறிப்பாக, உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஜீரணக் கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு.

முருங்கை மரத்தில் உள்ள காய்கள், இலை, பூ மட்டும் தான் நமக்குப் பயன்படுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முருங்கை மரத்தினுடைய பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகிய எல்லாமே மருந்தாகப் பயன்படுகின்றன.
 
முருங்கை உடலுக்குள் இருக்கின்ற கொழுப்புகள் மற்றும் குளுக்குாஸின் அளவினைக் குறைக்கின்றது. இது உடலுக்குள் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
 
இது உடலுக்குள் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் இருந்து முருங்கை முற்றிலும் உங்களைக்  காப்பாற்றும். ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் வராமல் உங்களை காப்பாற்றும்.
 
முருங்கை இலையினுடைய இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு நம்முடைய உடலில் காயங்களை ஆற்றுவதற்கான தன்மைகள் அதிகமாக  உள்ளது. இது காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
 
முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் உங்கள் செல்களில் சேதம் உண்டாகாமல் தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. உடலுக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் இது உங்களுக்கு உதவும்.
 
முருங்கை இலையின் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் சம்பந்தமான இதய நோய்கள், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் நிறைந்திருக்கின்றன.
 
முருங்கை டீ:
 
முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு  நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்