இத்தனை அற்புத பலன்களை தரக்கூடியதா சீரகத்தண்ணீர் !!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:25 IST)
சீரகத்தில் வைட்டமின் ஏ மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது.


சீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது.

உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு சீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது சீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.

நீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு சீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.

சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டு முறை- வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்.

சீரகம் வயிற்று வலி மற்றும் குடல் வாயுவை நீக்குகிறது.  பயன்பாட்டு முறை- இந்த பயன்பாட்டிற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள், சிறிது இஞ்சி, பாறை உப்பு மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் அது குளிர்ந்ததும் குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்