பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் எலுமிச்சை !!

புதன், 16 மார்ச் 2022 (10:52 IST)
எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் பிற சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது.


எலுமிச்சை பல நோய்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனை வைத்து ஊறுகாய், மிட்டாய், மருந்துகள்,  குளிர்பானம்  முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.

ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, பிழிந்து சாறக்கி கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும்.

எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கி உடல் நறுமணத்துடன் புத்துணர்வு பெறும். எலுமிச்சை பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம்.

பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்