பல மருத்துவ குணங்களை கொண்ட மிளகாய் !!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:26 IST)
மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும். முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.


உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்க உதவுகிறது.

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளை குறைக்க உதவுகிறது .

மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது. அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும்.

மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படுகிறது.

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல பயனை கொடுக்கும்.

உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்