ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கோன், பட்டாணியில் அதிக அளவு உள்ளதால், அது இதய நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.
பச்சை பட்டாணியில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.