தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.
தேன் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
அதிகாலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறுடன் தேனை சேர்த்து உட்கொண்டால், செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் குறைத்து, உடலை நீரேற்றமாக வைத்து, அழகை மேம்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
தேனில் வைட்டமின்கள் பி1, பி2, சி, பி6, பி5 மற்றும் பி3 ஆகிவை அடங்கியுள்ளன. அவை மட்டுமின்றி தாமிரம், அயோடின், மற்றும் துத்தநாகம் ஆகியவையும் சிறிய அளவில் உள்ளன.